‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
யார் இந்த ரெஜினா என்று சிலர் கண்டிப்பாகக் கேட்பார்கள். அவர்களுக்காக ஒரு சின்ன பிளாஷ் பேக். பிரசன்னா, லைலா நடித்த 'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக நடித்தவர்தான் இந்த ரெஜினா கஸன்ட்ரா. அதன் பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தாலும் இவரை ஊருக்கெல்லாம் தெரிய வைத்தது 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம்தான். சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவருக்கு தொடர்ந்து தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் அப்படியே ஆந்திரா பக்கம் தாவி விட்டார். அங்கு செம கிளாமராக நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். அதோடு சமீபத்தில் அவர் நாயகியாக நடித்து வெளிவந்த 'ரா ரா கிருஷ்ணய்யா' படத்தில் நாயகன் சந்தீப்புடன் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த முத்தக் காட்சிக்காகவும் இருவருக்குமிடையேயான 'லக் கெமிஸ்ட்ரி'யும் ஆந்திர இளைஞர்களைக் கவர்ந்து விட்டதாம்.
கிளாமராகவும் நடிக்கத் தயார், முத்தக் காட்சியிலும் நடிக்கத் தயார் என திரையுலகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு ரெஜினா நடந்து கொள்வதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து தற்போது நான்கு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். பல சிறிய தயாரிப்பாளர்கள் ரெஜினாவை அவர்களது படங்களில் நடிக்க வைக்க அலை மோதுகிறார்களாம். தமிழில் நடிப்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் தெலுங்கு வாய்ப்புகளிலேயே ரெஜினா கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்கிறார்கள். அதற்குக் காரணம் அங்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அட, ரெஜினா டெக்னிக் நமக்கு புரியாம போச்சேன்னு சில முன்னணி நடிகைகளே புலம்புகிறார்களாம்.
சரி, காதல் விஷயத்திற்கு வருவோம். ரெஜினாவுக்கும், சந்தீப்புக்கும் திரையில் இருந்த காதல் கெமிஸ்ட்ரி இப்போது நிஜ வாழ்விலும் பற்றிக் கொண்டதாம். இருவரும் தீவிரமாகக் காதலித்து வருகிறார்கள் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். இது படத்திற்கான பப்ளிசிட்டியா அல்லது நிஜமா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கிறார்கள். எல்லா காதலும் இப்படித்தானே ஆரம்பிக்கும்...