பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
1991-ல் மாங்கல்யம் தந்துனானே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அகத்தியன். அதையடுத்து மதுமதி, வான்மதி ஆகிய படங்களை இயக்கியவருக்கு காதல் கோட்டை படம் தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் அஜீத்-தேவயானி ஜோடியாக நடித்திருநதனர். தொடர்ந்து விடுகதை, கோகுலத்தில் சீதை, காதல் கவிதை போன்ற படங்களும் அவர் இயக்கத்தில் வெளியாகின.
பின்னர் அவர் இயக்கிய காதல் சாம்ராஜ்ஜியம் என்ற படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து அகத்தியனின் சினிமா பயணத்தில் தொய்வு நிலை ஏற்பட்டது. இருப்பினும் பலவித போராட்டங்களுக்கிடையே ராமகிருஷ்ணா, செல்வம் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அந்த படங்கள் வெற்றி பெறாததால், பின்னர் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது ஒரு படத்தை இயக்கயிருக்கிறார் அகத்தியன். இந்த படத்தை டைரக்டர் பாரதிராஜா தயாரிக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதால் தற்போது கதை விவாதம் உள்ளிட்ட முதல்கட்ட வேலைகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆக, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அகத்தியன், ஆகியோரின் இயக்குனர்களின் கைவண்ணத்தில் ஒரு மெகா படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கான தலைப்பும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.