தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சற்குணம் இயக்கிய களவாணி படத்தில் விமலுக்கு ஜோடியாக கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆனவர் ஓவியா. முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அசின், நயன்தாராவைப்போன்று கோலிவுட்டில் இவரும் பெரிய இடத்தை பிடித்து விடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பின்னர் சரியான படங்களை தேர்வு செய்யாததால் ஓவியாவின் மார்க்கெட் டவுன் ஆனது.
இருப்பினும், மன்மதன் அம்பு, மெரினா படங்களுக்குப்பிறகு தனது மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டும் முயற்சியாக திடீரென்று கலகலப்பு படத்தில் கவர்ச்சிக்கோதாவில் இறங்கினார் ஓவியா, அப்படத்தில் நடித்த இன்னொரு நாயகியான அஞ்சலியைப்போன்றே அயிட்டம் நடிகைகளுக்கு இணையாக ஓவியாவும் உடம்பைக்காட்டி வளைந்து நெளிந்து நடனமாடியிருந்தார்.
அதனால், இவர் தேற மாட்டார் என்று கழட்டி விட்டவர்கள்கூட இப்போது ஓவியாவை ஹோம்லி, கிளாமர் என இரண்டுவிதமாகவும் யூஸ் பண்ணிக்கொள்ளலாம் என்று வாய்ப்பு கொடுக்கத் தொடங்கி விட்டனர். அந்த வகையில், மதயானைக்கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே படங்களுக்குப்பிறகு இப்போது சரத்குமார் ஹீரோ-வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
இதே படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் மீராநந்தன் ஹோம்லியாக நடிக்க ஓவியாவோ கவர்ச்சி கட்டழகியாக நடிக்கிறாராம். அதோடு, புலிவால் படத்தில் பிரசன்னாவுடன் முத்தக்காட்சியில் நடித்த ஓவியா, இந்த படத்தை இயக்குவது கமர்சசியல் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் என்பதால், அவர் என்னென்ன கமர்சியல் யுக்திகளை கடைபிடிக்கச்சொல்கிறாரோ அதன்படி நடித்து, கோலிவுட் ரேட்டிங்கில் தனது பெயரை உயர்த்திக்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறாராம் ஓவியா.