Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தம்பியை விட அண்ணனுடன் நடிக்க விரும்பும் மியா!

12 ஜூலை, 2014 - 17:52 IST
எழுத்தின் அளவு:

ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் படம் அமரகாவியம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மியா ஜார்ஜ். கேரளாவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கேரியரைத் தொடங்கியவர். ஒரு சுமார் பேமிலி, டாக்டர் லவ், ஏ அதுல காலத்து போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் சாட்டயேஸ் என்ற படத்த்தில் ஹீரோயினான் ஆனார்.


2012ம் ஆண்டு மிஸ் கேரளா போட்டியில் உடல்கட்டு அழகி டைட்டில் வென்றதும், முறைப்படி நடனங்கள் கற்றிருப்பதும் மியாவை சினிமாவில் வளர வைத்தது. தற்போது 6பி பாரடைஸ், நயனா, ஹே ஐ ஏம் டோனி படங்களில் நடித்து வருகிறார். 8 மலையாள படங்களில் நடித்துவிட்டு 9வது படமாக அமரகாவியம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தம்பி சத்யாவுடன் நடித்தாலும அண்ணன் ஆர்யாவுடன் நடிக்கத்தான் அதிக விருப்பம் என்கிறார்.


அவர் கூறியிருப்பதாவது: பள்ளியில் பாடம் படிக்கும்போதே நடனத்தையும் சேர்த்தே கற்றேன். குச்சிபுடி, மோகினி ஆட்டம், பரதம், கதகளி என்று நடனத்தில் எதையும் விட்டு வைக்கவில்லை. பள்ளியில் என்னை எல்லோரும் சகலகலாவல்லி என்றுதான் சொல்வார்கள். நடனம், மாடலிங் அனுபவம் இருந்தாலும் நடிப்பு பயிற்சி எடுக்கவில்லை. சினிமாவில் நடித்துதான் நடிப்பு கற்றேன்.


ஆர்யாவுடன் நடிக்கத்தான் மிகவும் ஆசையுடன் இருந்தேன். என்றாலும் ஆர்யா தயாரிப்பில் அவரது தம்பியுடன் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆர்யாவுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எனது பேச்சில் தற்போது கொஞ்சம் மலையாள வாசனை இருக்கிறது. விரைவிலேயே நன்றாக தமிழ்பேச கற்று என் படத்துக்கு நானே டப்பிங் பேசுவேன் என்கிறார் மியா ஜார்ஜ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in