Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மஞ்சப்பை இயக்குநரின் அடுத்தப் படம்....!

12 ஜூலை, 2014 - 15:59 IST
எழுத்தின் அளவு:

கடந்த மாதம் வெளியான படங்களில் வசூல் ரீதியில் வெற்றியடைந்த படம் - மஞ்சப்பை. இயக்குநர் சற்குணம் தயாரித்த இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி வாங்கி தன்னுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார். படத்தைத் தயாரித்த சற்குணத்துக்கு சில லட்சங்கள் லாபம் என்றால், அதை வாங்கி வெளியிட்ட லிங்குசாமிக்கு பல கோடிகள் லாபம் கிடைத்ததாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எல்லா தரப்பினருக்கும் லாபத்தைக் கொடுத்த மஞ்சப்பை படத்தை இயக்கியவர் என்.ராகவன் என்ற புதுமுக இயக்குநர். இவர் சற்குணத்திடம் உதவியாளராக இருந்தவர்.


மஞ்சப்பை படத்தின் வெற்றியைத்தொடர்ந்து என்.ராகவனுக்கு பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாக தேடி வந்தன. அவற்றில் தமிழ்க்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்திடம் மட்டும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் அவர். ஆக..என்.ராகவனின் அடுத்தப் படத்தைத் தயாரிக்க இருப்பது இந்த நிறுவனம்தான். இது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கு சொந்தமான பட நிறுவனம். இவர் ஏற்கனவே ஜீவாவை வைத்து என்றென்றும் புன்னகை படத்தைத் தயாரித்தவர். அப்படத்தைத் தொடர்ந்து தற்போது ராகவன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார் தமிழ்க்குமரன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in