இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு ஆச்சரியம் நடப்பது வழக்கம்தான். ஆனால், இப்படிப்பட்ட ஆச்சரியம் நடப்பது இதுதான் முதல் முறையாகக் கூட இருக்கலாம். நேற்று “ராமானுஜன், பப்பாளி, நளனும் நந்தினியும்” ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களின் கதைக் கருவும் ஒன்றாக இருப்பதுதான் அந்த ஆச்சரியம். அதாவது, வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் லட்சியம் கொண்ட இளைஞர்களைப் பற்றிய படமாகத்தான் இந்த மூன்று படங்களுமே அமைந்துள்ளன.
'ராமானுஜன்' படம் கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு பற்றிய பயோகிராபி படம். இருந்தாலும் திரைப்படமாகப் பார்க்கும் போது, கணிதத்தில் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி சாதனைகளைப் புரிய வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஏழை இளைஞனின் கதைதான் இந்தப் படம்.
'பப்பாளி' படம், ஒரு சாதாரண கையேந்தி பவன் நடத்திக் கொண்டிருக்கும் குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் ஐஏஎஸ் படித்து கலெக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதையாக அமைந்துள்ளது.
'நளனும் நந்தினியும்' படத்தில் இன்ஜினியரிங் படித்து முடித்த ஒரு மாணவன் திரைப்படத் துறையில் நுழைந்து ஒரு இயக்குனராக சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுதான் படத்தின் கதையாக அமைந்துள்ளது.
இந்த மூன்று படங்களிலுமே நாயகர்கள் சாதிப்பதற்கு ஒரு பெண் பின்னணியில் இருக்கிறார். 'ராமானுஜன்' சாதிப்பதற்கு அவருடைய அம்மா உறுதுணையாக இருக்கிறார். 'பப்பாளி' படத்தின் நாயகன் சாதிப்பதற்கு அவருடைய மாமியார் துணையாக இருக்கிறார். 'நளனும் நந்தினியும்' நாயகன் நினைத்த லட்சியத்தை அடைவதற்கு அவருடைய மனைவி துணையாக இருக்கிறார். இப்போது புரிகிறதா இந்த ஆச்சரிய ஒற்றுமை...!