இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வளர்ந்து வரும் பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத். சிங்கப்பூரில் பிறந்த இவர் இப்போது வசிப்பது கலிபோர்னியாவில். சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார். பரதேசி படத்தில் அவரை பாடகியாக அறிமுகப்படுத்தினார் பாலா. செங்காடே, ஒர் மிருகம் பாடல்களை பாடினார். அதன் பிறகு ஒசாக்கா என்ற பாடலை வணக்கம் சென்னை படத்தில் பாடினார். இதுதவிர தனி ஆல்பங்களில் பாடி வருகிறார்.
தற்போது பிரகதி நடிகையாகிறார். பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நாதஸ்வர கலைஞராக வரும் சசிகுமாரின் தங்கை ஒரு நாட்டுப்புற பாடகி. அந்த கேரக்டருக்கு பாலா பிரகதியை தேர்வு செய்துள்ளார். தற்போது பிரகதி நடிப்பு பயிற்சியும், நடிக்க போகும் கேரக்டருக்கான ஒத்திகையும் செய்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு பாடகி நடிகையாகி இருக்கிறார்.