'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரியமான பெல் நடிகை அந்த மலையாள நடிகரை தீவிரமாக காதலிப்பது உண்மைதானாம். ஆனால் தாய்குலத்தின் வற்புறுத்தல் காரணமாகத்தான் மறுப்பு அறிக்கை விடுகிறாராம். "நாலு படம் வந்துகிட்டு இருக்குற நேரத்துல சம்பாதிக்கிற வழிய பார்க்காம காதல் கீதல்னு அலைஞ்சா நீ பிள்ளையும் இல்லை நான் அம்மாவும் இல்லை"ன்னு அம்மா அடித்த செண்டிமெண்ட் தாக்குதல்தான் காதல் மறுப்புக்கு காரணமாம். "காதலிக்கிறதுதான் காதலிக்கிற டாப்புல இருக்கிற ஹீரோக்களை காதலிக்க கூடாதா" என்பதும் தாய்குலத்தின் ஆதங்கமாம். இப்போ அம்மாவுக்கு தெரியாமல் காதலை வளர்க்கிறாராம் பிரியமான பெல் நடிகை.