அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சுப்பிரமணியபுரம் ஸ்வாதி, நவ்தீப் இணைந்து நடித்துள்ள தெலுங்கு படம் பங்காரு கொட்டிபெட்டா. ராஜ் பிப்பல்லா இயக்கி இருந்தார். மகேஷ் சங்கர் இசை அமைத்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீசானது. தற்போது இந்தப் படத்தை "லவ் பண்ணுங்க லைப் நல்லா இருக்கும்" என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். தமிழுக்கு ஏற்ப படத்தில் சில மாற்றங்களை செய்து தமிழ் படமாக மாற்றுகிறார்கள். கானா பாலாவின் பாடல் காட்சியை தனியாக எடுத்து படத்தோடு சேர்க்கிறார்கள். பாடல்களை நா.முத்துகுமார், சினேகன், கானா பாலா எழுதியுள்ளனர். வசனத்தை ஆர்.பாலா எழுதுகிறார்.
"மூன்று தனித்தனி காதல் கதைகள் ஒரு இடத்தில் இணையும் இளமை பொங்கும் சுவையான காதல் கதை. கானா பாலாவின் "வாடா மச்சான் முன்னாடி வாழ்க்கை ஒரு கண்ணாடி..." என்ற பாடல் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது. இது நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்" என்கிறார் இயக்குனர் ராஜ்.