ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு-தனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது. அஜீத்-விஜய் படங்களுக்கு இடையே போட்டி நடப்பது போன்று, சிம்புவும், தனுசும் போட்டிக்கோதாவில் குதித்தனர். அதோடு, பேட்டிகளிலும் மறைமுகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வந்தனர். ஆனால், பின்னர் மார்க்கெட்டில் சூர்யா, ஆர்யா,விஷால், சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி என்று ஏராளமான நடிகர்கள் என்ட்ரி ஆனதால், அவர்களுக்கிடையே இருந்து வந்த போட்டி மனநிலை மாறியது. இருவரும் மீண்டும் மேடைகளில் நண்பர்களாக தோள் போட்டுக்கொணடு ஒரே மைக்கில் மாறி மாறி பேசத் தொடங்கினர்.
இந்த நிலையில், தங்களது நட்பை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில், தான் சொந்தமாக தயாரித்து நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்தில், சிம்பு நடித்துள்ள வாலு படத்தின் ட்ரெய்லரை இணைத்து வெளியிடுகிறாராம் தனுஷ். முன்னதாக வேலையில்லா பட்டதாரி படத்தின் சில காட்சிகளை சமீபத்தில் தனுஷின் அழைப்பின் பேரில் சென்று பார்த்த சிம்பு, அவரது நடிப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறாராம். நண்பனின் இந்த வெளிப்படையான பாராட்டில் உருகிப்போய் இருக்கிறாராம் தனுஷ்.