Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி தேவை..!

11 ஜூலை, 2014 - 14:35 IST
எழுத்தின் அளவு:

இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் இணைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் கடந்த வருடம் வெளியானது. யாருமே, ஏன்... சிவகார்த்திகேயன் உட்பட அப்படத்தில் பணியாற்றிவர்களே எதிர்பார்க்காதவகையில் கடந்த வருடம் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம். சுமார் 4 கோடியில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் வசூல் செய்தது 25 கோடிக்கு மேல். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கு எல்லா செலவுகளும்போக 8 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்தது. இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைவதும், ரஜினி முருகன் என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார் என்பதும் தெரிந்த தகவல்கள்தான். லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா?


ரஜினி முருகன் படத்தின் ஸ்கிரிட்வொர்க் முடிந்து, படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளநிலையில் இன்னமும் கதாநாயகி சிக்கவில்லை என்பதுதான் ஒரே பிரச்சனை. மான் கராத்தே படத்தில் ஹன்சிகா மோத்வானி உடன் நடித்துவிட்ட சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் ஜோடியாக நடிக்க வைக்க நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரை பரிசீலித்திருக்கிறார்கள். அவர்கள் கேட்ட சம்பளம் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம்.


அது மட்டுமல்ல, கதாநாயகிக்கு இத்தனை கோடி சம்பளம் கொடுத்தால் பட்ஜெட் எகிறுவிடும் என்று தயக்கம் காட்டியதாம் தயாரிப்பாளர் தரப்பு. அதன் பிறகு நடைபெற்ற ஆலோசனையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதுமுக நடிகையை கதாநாயகியாக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இப்படியொரு முடிவுக்கு வந்த பின் பி.ஆர்.ஓ.க்கள் மூலம் நிறைய பெண்களை வரவழைத்து பார்த்துள்ளனர். வந்த பெண்கள் இயக்குநருக்கு அவ்வளவாக திருப்தி இல்லை. எனவே, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கதாநாயகி நடிகை தேவை என்று ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in