இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய்யின் தம்பி என்ற விசிட்டிங் கார்டு இருந்தும் ஏனோ விக்ராந்துக்கு வெற்றி வசப்படவே இல்லை. சுமார் அரை டஜன் படங்களில் நடித்தும் விக்ராந்த் இன்னமும் முதல் வரிசைக்கு வராமலே இருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த நேரத்தில் விக்ராந்துக்குக் சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிற வாய்ப்பு கிடைத்தது. நடிக்க வருவதற்கு முன்பு கிரிக்கெட் வீரராக மாறில அளவிலான போட்டிகளில் விளையாடியவர் விக்ராந்த். எனவே சிசிஎல் போட்டிகளில் வெளுத்து வாங்கினார்.
அவரது ஆட்டத்திறமை சிசிஎல் போட்டிகளின்போது ஒவ்வொரு சீசனிலும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கிடையில் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனான விஷால் உடன் விக்ராந்துக்கு நட்பு உண்டானது. அந்த நட்பு நாளடைவில் அண்ணன் தம்பி பாசப்பிணைப்பாக மாறியது. இந்த பாசத்தின் காரணமாக விக்ராந்தை வைத்து தானே ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். அந்தப் படத்தில் விஷால் அண்ணனாகவும், விக்ராந்த் தம்பியாகவும் நடிக்க உள்ளனர். தற்போது பூஜை படத்தை தயாரித்து, நடித்து வரும் விஷால் அதை முடித்த கையோடு இந்தப் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை விஷாலின் நண்பரான திரு இயக்க இருக்கிறாராம்.