சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் இன்னும் அப்படியே தன்னை மெயின்டெயின் பண்ணி வரும் த்ரிஷா, இப்போது கடை திறப்பு விழாக்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், நமீதா போன்ற லோக்கல் நடிகைகள் உள்ளூருக்குள்ளேயே வட்டம் போட்டுக்கொண்டிருக்க த்ரிஷாவோ கடல் கடந்து தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளார்.
அதாவது, படப்பிடிப்பு இல்லை என்றால், அமெரிக்கா, கனடா, லண்டன் என்று பறந்து விடுகிறார் த்ரிஷா. அங்குள்ள தமிழர்கள் நடத்தும் முக்கிய விழாக்களில் கலந்து கொள்பவர், தான் சினிமாக்களில் இதுவரை நடிக்காத கவர்ச்சிகரமான உடைகளில் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறாராம். அதோடு, ஏரியாவுக்கு தகுந்த மாதிரி என்னோட கெட்டப்பையும் சேஞ்ச் பண்ணிக்கிறேன் என்று தானே முந்திக்கொண்டு தனது காஸ்டியூம் மாற்றத்துக்கு காரணம் சொல்லிவிடுகிறாராம் த்ரிஷா.
அப்படி செல்பவர், விழாக்களில் கலந்து கொள்வது, விருந்து சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அங்குள்ள பிரமாண்ட கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்கிறாராம். இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று அவர்கள் சொன்னால் அங்கேயே டேரோ போடும் த்ரிஷா, தனது அன்பிற்குரிய ராணா உள்ளிட்ட சில நட்பு நடிகர்களை அயல்நாடுகளுக்கு வரவைத்து பொழுதை கழிக்கிறாராம்.
மேலும், இப்படி வெளிநாடுகளில் ரிப்பன் கட் பண்ணும் த்ரிஷாவுக்கு, அங்குள்ள கடைக்காரர்கள் தமிழ்நாட்டைப்போல் இல்லாமல் பொன்னையும், பொருளையும் அள்ளிக்கெடுக்கிறார்களாம். அந்த வகையில், காஸ்ட்லியான கடை திறப்பு நடிகையாகியிருக்கிறார் திரிஷா.