Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நவீன வசதிகள் கொண்ட கேரவன் வாங்கினார் மோகன்லால்

08 ஜூலை, 2014 - 15:54 IST
எழுத்தின் அளவு:

பொதுவாக ஓரளவுக்கு பிரபலமாகிவிட்ட நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில்தான் தங்குவார்கள். இது குளிர்பதனம் செய்யப்பட்ட சொகுசு நடமாடும் அறை போன்றது. கழிப்பிட வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட பல வசதிகள் இதில் இருக்கும். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாடகை உள்ள கேரவன்கள் உள்ளது. பல நடிகர்கள் சொந்த கேரவன் வைத்திருப்பார்கள். அதற்குரிய வாடகையை தயாரிப்பாளர்களிடம் வசூல் செய்து கொள்வார்கள்.


ஆனால் மலையாள சினிமாவில் கேரவன் என்பது ரொம்ப அபூர்வம். மம்முட்டி, மோகன்லால், திலீப்குமார், பிருத்விராஜ் போன்ற சில முக்கிய நடிகர்கள் மட்டுமே கேரவன் பயன்படுத்துவார்கள். அதுவும் அவர்களது சொந்த கேரவனாக இருக்கும். கேரவனுக்கான பெட்ரோல் மட்டும் தயாரிப்பாளர் போட வேண்டும்.


இப்போது மோகன்லால் அதி நவீன வசதிகள் கொண்ட கேரவன் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதில் 7 நட்சத்திர ஓட்டல் அறையின் அத்தனை வசதிகளும் உள்ளது. படுக்கை அறை, ரீடிங் ரூம், சேட்டிலைட் டி.வி. வசதி, மைக்ரோவேவ் கிச்சன், சிறிய இசை அரங்கம், மினி தியேட்டர், மசாஜ் நாற்காலி என அத்தனை வசதிகளும் இதனுள் இருக்கிறது. உள்ளே இருந்து கொண்டு கேரவனை சுற்றியுள்ள கேமரா மூலம் வெளியில் நடப்பதை பார்க்க முடியும். தென்னிந்திய நட்சத்திரங்கள் பயன்படுத்தும் கேரவன்களில் இதுதான் நவீனமானது என்கிறார்கள். விலை இரண்டு கோடி என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in