மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இயக்குனர் விஷ்ணுவர்த்தன், தனது ஆஸ்தான ஹீரோ ஆர்யா நடிக்க இயக்கி வரும் புதிய படம் 'யட்சன்'. இதில் கிருஷ்ணா, ஆர்யாவுக்கு நிகரான கேரக்டரில் நடிக்கிறார். கிருஷ்ணா விஷ்ணுவர்த்தனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யாவுக்கு ஜோடியாக தீபா சந்நிதி நடித்து வருகிறார். தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடி தேடி வந்தார் விஷ்ணுவர்த்தன். கதைப்படி கிருஷ்ணாவை டார்சர் செய்து கொண்டே இருக்கும் காதலி வேடம். துறுதுறுவென சண்டைபிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தார்.
சமீபத்தில் வெளிவந்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி படங்களில் ஸ்வாதி அப்படிப்பட்ட கேரக்டரில்தான் நடித்திருந்தார். அதனால் ஸ்வாதியையே நடிக்க வைக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் ஸ்வாதி, கிருஷ்ணா தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.