அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
ஒரு சிடி 30 ரூபாய் என்ற படத்தில் பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பை தகடு தகடு என்று மாற்றி இருக்கிறார்கள்.
இப்படத்தை வென்.கோவிந்த் என்ற புதிய தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். இப்படம் தவிர சவாரி, மண்ணாங்கட்டி பசங்க என மேலும் இரண்டு படங்கள் இவரது தயாரிப்பில் உள்ளன.
மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து இவர் சற்றே வித்தியாசமானவராக இருக்கிறார். எப்படி?
திரைப்படம் தயாரிப்பது என முடிவெடுத்ததும் அது பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆறு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.
அதோடு, வெளிநாட்டில் நடந்த ஒரு கண்காட்சிக்கு சென்று, 2 - ரெட் கேமரா, 2 - 5டி கேமரா, சில லைட்டுகள், கிரேன் அனைத்து வகையான லென்ஸ்கள், டப்பிங் தியேட்டர் அமைக்க தேவையான உபகரணங்கள்.. என அனைத்தையும் வாங்கி வந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து வாகனங்களையும் வாங்கி வைத்திருக்கிறார். லொக்கேஷன் கூட இவரிடம் நிறைய உள்ளதாம்.
ஒரு லைட்மேன் பேட்டா உள்ளூரில் எவ்வளவு வெளியூரில் எவ்வளவு .. அனைத்து தொழிலாளர்களுக்கும் என்ன தர வேண்டும் என எந்த கேள்வி கேட்டாலும் உடனே பதில் சொல்வார். சிறிய தரமான படங்களை தயாரித்து தன் நிறுவனத்தை நிலைநிறுத்த விரும்புகிறார்.
இயக்குநராகும் இவருக்கு திட்டமும் உள்ளது. அதற்கான பயிற்சியில் இருக்கிறாராம்.
தயாரிப்பாளர் என்பவர் இப்படித்தான் இருக்கணும்...!