Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

விஜய் டி.வி. விருது வழங்கும் விழா: சிறந்த நடிகர், இயக்குனர் கமலஹாசன். சிறந்த நடிகை நயன்தாரா

07 ஜூலை, 2014 - 08:58 IST
எழுத்தின் அளவு:

விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தொலைக்காட்சி நேயர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்த விருதுகளை வழங்குகிறது. 2013ம் ஆண்டுக்கான 8வது விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது.
அதில் விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:
மக்கள் விரும்பும் ஹீரோ (பேவரைட்): விஜய் (தலைவா)
மக்கள் விரும்பும் இயக்குனர் (பேவரைட்): கமலஹாசன் (விஸ்வரூபம்)
சிறந்த நடிகர்: கமலஹாசன் (விஸ்வரூபம்)
சிறந்த நடிகை: நயன்தாரா (ராஜா ராணி)
சிறந்த படம்: தங்க மீன்கள் (இயக்குனர் ராம்)
சிறந்த இயக்குனர்: பாலா (பரதேசி)
சிறந்த புதுமுக இயக்குனர் : அட்லி (ராஜா ராணி)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம் (பல படங்கள்)
சிறந்த வில்லன் : அர்ஜுன் (கடல்)
சிறந்த துணை நடிகர்: பாரதிராஜா (பாண்டியநாடு)
சிறந்த துணை நடிகை: தன்ஷிகா (பரதேசி)
சிறந்த அறிமுக நடிகர்: கவுதம் கார்த்திக் (கடல்)
சிறந்த அறிமுக நடிகை: நஸ்ரியா (ராஜா ராணி)
சிறந்த ஒளிப்பதிவாளர் : ராஜீவ் மேனன் (கடல்)
சிறந்த இசை அமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் (சூது கவ்வும்)
சிறந்த ஒப்பனை கலைஞர்: தசரன் (பரதேசி)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா (பரதேசி)
சிறந்த பின்னணி பாடகர்: யுவன் ஷங்கர் ராஜா (மரியான்)
சிறந்த பின்னணி பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்
சிறந்த பாடல்: எதிர்நீச்சலடி (பாடியவர் அனிருத்)
சிறந்த பாடலாசிரியர் : நா.முத்துகுமார் (பாடல்: தெய்வங்கள் எல்லாம்.... படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா)
சிறந்த வசனகர்த்தா: நவீன் (மூடர்கூடம்)
சிறந்த திரைக்கதை ஆசிரியர்: நலன் குமாரசாமி (சூது கவ்வும்)
சிறந்த கலை இயக்குனர்-: லால்குடி இளையராஜா (விஸ்வரூபம்)
சிறந்த நடன இயக்குனர்: பிருந்தா (கடல்)
இது தவிர இயக்குனர் ஷங்கருக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருதும். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஷாருக்கானுக்கு சிறந்த பொழுதுபோக்காளர் விருதும் வழங்கப்பட்டது. நடிகைகள் ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளை புதுமணப்பெண் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் படம் அருகில் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in