மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கரண், புதுமுகம் ஷிபாலி சர்மா, மணிவண்ணன் நடித்த படம் சூரன். பாலு நாராயணன் இயக்கி இருந்தார். பி.பி.பாலாஜி இசை அமைத்திருந்தார், கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் 3 வருடங்களுக்கு முன்பே ரெடியாகிவிட்டது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக தடைபட்டிருந்த இந்தப் படம் வருகிற 11ந் தேதி ரிலீசாகிறது. இந்தப் படத்தில் நம்பிக்கையோடு அறிமுகமான ஹீரோயின் ஷிபாலி சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று விட்டார். கரண் நடித்த கந்தா படமும் தயாராகி இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் ரிலீசானது. இரண்டு முகம் படம் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. தற்போது கன்னியும் காளையும் செம காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகளும் முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது.