'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷின் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கணவருடன் தேனிலவை கொண்டாட அமெரிக்கா செல்கிறார். தென் அமெரிக்க நகரங்கள் மற்றும் கனடாவில் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரமாண்ட இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இதற்காக தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள், பாடகர் பாடகிகளை அழைத்துச் செல்கிறார். இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க திவ்யதர்ஷினி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த மாதமும் அடுத்த மாதமும் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும்போதே தன் கணவருடன் அங்கு தேனிலவும் முடித்து விட்டு திரும்ப முடிவு செய்திருக்கிறார். திரும்பி வந்ததும் சின்னத்திரையில் தனது பணிகளை தொடர இருக்கிறார் டிடி.