துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
சந்தானம் ஹீரோவாகி விட்டதால், அடுத்த நம்பர்-ஒன் காமெடியன் நாம்தான் என்று நினைத்திருந்தார் சூரி. அதோடு சில படங்களில் அப்படங்களின் ஹீரோக்களுக்கு இணையான வேடத்திலும் நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் வெளியாகவில்லை. அதனால் பரபரப்பாக வந்த சூரியின் மார்க்கெட் மந்தமாகி விட்டது.
இந்த நிலையில, தற்போது அலெக்ஸ் பாண்டியன் படத்தையடுத்து ஜெயம்ரவியை வைத்து சுராஜ் இயக்கும் படத்தில் முக்கிய காமெடியனாக நடிக்கிறார் சூரி. நகரம், கிராமம் என இரண்டுவிதமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் படம் முழுக்க ஜெயம்ரவியுடன் வரும் சூரிக்கு, சின்னப்பட்டி சின்னச்சாமி என்ற வேடமாம்.
கதைப்படி, அஞ்சலியை காதலிக்க சுற்றி வரும் ஜெயம்ரவிக்கு போட்டியாக பரோட்டா சூரியும் காதல் வலை விரிப்பாராம். அதனால் அவர் வரும் காட்சிகளை கலகலப்பாக படமாக்குகிறாராம் சுராஜ். மேலும், சூரியின் இந்த வேடம் குறித்து அவர் கூறும்போது, இதற்கு முன்பு எனது இயக்கத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர், அசால்ட் ஆறுமுகம் போன்ற கேரக்டர்களைப்போன்று சூரிக்கு இந்த வேடம் திருப்புமுனையாக அமையும் என்கிறார்.