மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கவிப்பேரரசு வைரமுத்துவின் 60வது பிறந்தநாள், ஜூலை 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக வைரமுத்துவின் ஒவ்வொரு பிறந்தநாளும் கவிஞர்கள் கலை இலக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, பிறந்தநாள் விழா கோவை கொடீசியா அரங்கில் நடக்கிறது. வைரமுத்துவுக்கு இது 60வது பிறந்தநாள் என்பதால் அதனை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
விழா காலை 10 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கருத்தரங்கம், இரத்த தானம், 6000 மரக்கன்று நடுதல், 60 பள்ளிகளுக்கு கவிஞரின் 36 படைப்புகள் அடங்கிய பேழைகள் வழங்குதல், மாநிலம் தழுவிய கல்லூரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொள்கிறார். அவருடன் நா.மகாலிங்கம், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், ஐகோர்ட் நீதிபதி விமலா, அவ்வை நடராசன், நான்குதலைமுறை இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.