வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல நடன இயக்குனர் தினேஷ், 'ஒரு குப்பைக்கதை' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். பாகன் படத்தை இயக்கிய அஸ்லம் தனது பெல்ஜியம் நண்பர் ராமதாசுடன் இணைந்து தயாரிக்கிறார். அஸ்லாமின் உதவியாளர் காளிரங்கசாமி இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதல் படத்துக்கு இசை அமைத்த ஜோஸ்வா ஸ்ரீதர் இசை அமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
தினேஷ் மாஸ்டர் ஜோடியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். ஆதலால் காதல் செய்வீர் படத்திற்கு பிறகு மனீஷா நடிக்கும் படம் இது. இடையில் சில பிரச்னைகள் காரணமாக சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல் படத்திலிருந்து விலகினார்.
குப்பைக்கதை படப்பிடிப்புகள் இம்மாதம் தொடங்குகிறது. "குப்பைக்கதை என்பதால் இது குப்பையான கதையுமல்ல குப்பையை பற்றிய கதையும் அல்ல. எக்குத்தப்பா தலைப்பு வைத்தால் எல்லோர்கிட்டேயும் ரீச்ஆகும்ங்றதால இந்த தலைப்பு வச்சிருக்கோம். ஆனா தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கு. படம் பார்த்துட்டு வெளியில வர்றப்போ புரியும்" என்கிறார் இயக்குனர் காளிரங்கசாமி.