அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
ஜெயம் ரவி நடித்த பூலோகம் படம் விரைவில் வெளிவரவிருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இப்போதைக்கு வெளிவராது என்று சொல்லப்பட்ட பூலோகம் படம் வெள்ளித்திரைக்கு வர திடீரென வேகம் பிடித்ததற்கு பின்னால் பலருக்கும் தெரியாத ஒரு சம்பவம் இருக்கிறது. என்ன சம்பவம்? பூலோகம் மற்றும் திருமணம் எனும் நிக்காஹ், ஐ, விஸ்வரூபம் -2 என ஒரே நேரத்தில் நான்கு படங்களை தயாரித்ததாலும், ஏற்கனவே வெளியான வல்லினம் போன்ற படங்கள் தோல்வியடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியதாலும் கடும் பண நெருக்கடியில் இருந்தது ஆஸ்கார் பிலிம்ஸ்! அதனால் எந்தப் படத்தையும் ரிலீஸ் பண்ண முடியவில்லை.
பூலோகம் படத்தில் நடித்து முடித்துவிட்டு, அது வெளிவராமல்போனதால் மனக்கஷ்டத்தில் இருந்த ஜெயம் ரவி இது பற்றி பேசுவதற்காக பூலோகம் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவியை சந்திக்க சென்றிருக்கிறார். தன் வருகையை ஏற்கனவே தெரிவித்துவிட்டு சென்ற ஜெயம் ரவியை, என்ன காரணத்தினாலோ சுமார் மூன்று மணி நேரம் காக்க வைத்திருக்கிறார் ஆஸ்கார் ரவி. அதன் பிறகும் அவரை சந்திக்காமல், தற்போது பிஸியாக இருப்பதாகவும், பிறகு தானே போனில் பேசுவதாகவும் ஆபிஸ்பையனிடம் சொல்லி அனுப்பி உள்ளார் ஆஸ்கார் பிலிம்ஸ்.
அவமானத்தில் முகம் சிவந்துபோன ஜெயம்ரவி கிளம்பி வந்து தன் அப்பா எடிட்டர் மோகனிடம் சொல்ல, அவர் போனிலேயே ஆஸ்கார் ரவியை வறுத்தெடுத்திருக்கிறார். அதன் பிறகு தன் செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஆஸ்கார் ரவி, பூலோகம் படத்தை விரைவில் வெளியிட முயற்சி செய்வதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகே பூலோகம் படத்தை வெள்ளித்திரைக்குக் கொண்டு வரும் வேலையில் இறங்கி உள்ளனர்.