Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியில் ரீ-மேக் ஆகிறது விண்ணைத்தாண்டி வருவாயா

13 ஏப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள விண்ணைத்தாண்டி வருவாயா படம் விரைவில் இந்தியில் ரீ-மேக் ஆகிறது. வித்தியாசமான கதையம்சத்துடன் படங்களை இயக்கி வெற்றி பெற்று வரும் கவுதம் வாசுதேவ் மேனன், இந்த படத்தில் சிம்புவையும், த்ரிஷாவையும் மிக அழகாக காட்டி ரசிக்க வைத்திருந்தார். விரல் வித்தைகளை காட்டி சினிமா ரசிகர்களை கடுப்பேற்றி வந்த சிம்பு, இந்த படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை மெருகேற்றியிருக்கிறார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சிம்புவின் நடிப்பு இப்படியென்றால் த்ரிஷாவின் நடிப்பை சொல்லவே வேண்டியதில்லை. ஜெஸ்ஸி என்ற மலையாள கிறிஸ்தவ பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

தமிழில் வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் இப்படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய கவுதம் ‌வாசுதேவ் மேனன் முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீ-மேக் சூட்டிங் விரைவில் தொடங்கும். ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உட்பட அதே டெக்னீஷியன்கள் பணியாற்றுவார்கள். தமிழ் பாடல் மெட்டுகளை இந்தியில் பயன்படுத்தி கொள்வோம். இரு பாடல்களை மட்டும் புதிதாக ரகுமான் தர உள்ளார். ஹீரோ வேடத்துக்கு மூன்று நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. ஹீரோயினுக்கான தேர்வும் நடக்கிறது. தலைப்பு இன்னும் முடிவாகவில்லை, என்று கூறியுள்ளார். இந்தி வி.தா.வ. படத்தை இயக்கி முடித்த பின்னரே அஜித்தின் 50வது படத்தை இயக்கவிருக்கறாராம் கவுதம். அநேகமாக டிசம்பரில் அஜித் பட சூட்டிங் தொடங்கும் என்று கவுதம் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

A.V.Bharathiraja. - Madurai,இந்தியா
31 ஜூலை, 2010 - 18:02 Report Abuse
 A.V.Bharathiraja. Thirisha and shimpu is very good acting
Rate this:
சிடிசன் - DAMMAM, SAUDI ARABIA,சவுதி அரேபியா
22 ஜூலை, 2010 - 19:54 Report Abuse
 சிடிசன் எ. ஆர். ரகுமான், கௌதம், சிம்பு, த்ரிஷா, கேமரா கணேஷ் - சான்சே இல்ல சாகடிசிடீங்க - படத்த பார்த்துட்டு சாப்டவே இல்ல, குட் பிலிம். வாழ்த்துக்கள்.
Rate this:
மதுரைக்காரன் - madurai,இந்தியா
19 ஜூன், 2010 - 16:24 Report Abuse
 மதுரைக்காரன் பெரும்பாலும் எல்லா படங்களும் ரீமேக்தானா .நல்ல கதைகள் கிடைக்கவில்லையா ?அல்லது தெரியவில்லையா ???????????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in