இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தி நடிகை மல்லிகா ஷெராவத், ஹாலிவுட் நடிகர் ஆன்டானியோ பண்டாரஸ்-ஐ காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை மல்லிகா ஷெராவத் மறுத்துள்ளார். மல்லிகாவின் ஸ்டைலிஸ்டான இவான் பிட்டன் என்பவரை மேற்கோள் காட்டி ஒரு இணையதளம் இது பற்றிய செய்தியை வெளியிட்டு பரபரப்பு கிளப்பியது.
இது பற்றி மல்லிகா ஷெராவத் கூறியதாவது, “ஆன்டானியோ மிகச் சிறந்த மனிதர், சிறந்த டான்சர், எனக்கு நன்கு அறிமுகமானவர். அவருடன் விடுமுறைப் பொழுதைக் கழிக்க நான் எங்கும் செல்லவில்லை. அவருடைய விவாகரத்து எனக்கு வருத்தமான செய்தி. எனக்கும் அவருக்கும் நெருக்கம் என்பதெல்லாம் உண்மையில்லை. இது பற்றிய செய்தியை வெளியிட்ட ஸ்டைலிஸ்ட் இவான் பிட்டன் எனது நண்பரே அல்ல. அவரை கேன்ஸ் திரைப்பட விழாவுக்காக மட்டுமே என்னுடன் பணிபுரிய அழைத்திருந்தேன். அதன் பின் அவருடன் சண்டை போட்டு விட்டேன். அவர்தான் என்னைப் பற்றிய அந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும். அவர் என்னைப் பற்றி என்ன பேசுவார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அவருடன் சண்டை போட்ட பிறகு அவருடன் பேசுவதே கிடையாது. அவர் என்னைப் பற்றி சொல்வதெல்லாம் பொருத்தமில்லாத ஒன்றுதான்,” என கடுப்பாகத் தெரிவித்துள்ளார் மல்லிகா ஷெராவத்.