தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்,தெலுங்கு சினிமாக்கள் தமன்னாவின் திறமைக்கு நல்ல தீனி போட்டு வந்தபோதும், தாய்மொழியான இந்தி சினிமாவிலும் திறமை காட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் தமன்னா. ஆனால், 100 சதவிகிதம் நம்பிக்கை வைத்து நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற இரண்டு படங்களும் படுதோல்வியடைந்து தமன்னாவின் வளர்ச்சிக்கு உலை வைத்து விட்டன.
அதனால் இந்தி சினிமா தனக்கு ராசியே இல்லை என்று தலையை தொங்க போட்டுக்கொண்டு தெற்கு நோக்கி வந்து விட்டார். புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியாக சம்பளத்தை குறைத்து சில பட அதிபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அதோடு, தனது அபிமானத்திற்குரிய ஆர்யா உள்ளிட்ட சில ஹீரோக்களிடமும் சிபாரிசு கோரி நிற்கிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தமன்னா இந்தியில் நடித்திருந்த இன்னொரு படமான இட்ஸ் எண்டர்டெயின்மென்ட் விரைவில் திரைக்கு வர உள்ளதாம். அதனால் ஒருவேளை இரண்டு முறை ஏமாற்றம் கண்ட நமக்கு இந்த படம் வெற்றியாக அமைந்து விடுமோ என்கிற நப்பாசை தமன்னாவுக்குள் ஏற்பட்டுள்ளதாம்.
அதனால், இதுவரை ஐதராபாத், சென்னை என்று சுற்றிக்கொண்டிருந்த தமன்னா மீண்டும் மும்பைக்கு பயணித்திருப்பவர், அந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறாராம்.