ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
இந்தி நடிகை வித்யாபாலன் தற்போது பாபி ஜசூஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது துப்பறியும் காமெடி படம். இதில் துப்பறியும் பெண்ணாக வித்யாபாலன் நடித்திருக்கிறார். 14 கெட்அப்கள் இருக்கிறது. இதில் 3 ஆண் வேடம். இந்தப் படத்தில் 36 வயதான வித்யா பாலன் 24 வயது அபு பைசலுடன் ரொமான்ஸ் பண்ணியிருக்கிறார். இதுபற்றி கேட்டபோதுதான் "ரொமான்ஸ் பண்ணுவதற்கு வயது தடையில்லை" என்று கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: என்னை விட வயது குறைந்தவர்களுடன் காதல் காட்சியில் நடிப்பதற்கு நான் வெட்டகப்பட்டதும் இல்லை, மறுத்ததும் இல்லை. ரொமான்ஸ் பண்ணுவதற்கு வயது ஒரு தடையே இல்லை. கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவதற்கு வயது வித்தியாசம் தேவையில்லை. நான்கூட என்னைவிட வயதில் மூத்த நஸ்ருதின் ஷாவுடன் ரொமான்ஸ் பண்ணி நடித்திருக்கிறேன். கதையும், கேரக்டரும் என்ன கேட்கிறதோ அதைக் கொடுக்க வேண்டியதுதான் நடிகையின் கடமை. அதைத்தான் நான் செய்கிறேன்.
ஒருவேளை எனக்கு பிடிக்காத, என்னால் நடிக்க முடியாத கேரக்டராக இருந்தால் முதலிலேயே மறுத்து விடுவேன். ஒத்துக் கொண்ட பிறகு எந்த விஷயம் பற்றியும் யோசிப்பதில்லை. பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தாதீர்கள். நல்ல கதை அமைந்தால் எந்த கானுடனும் இணைந்து நடிப்பேன். என்கிறார் வித்யாபாலன்.