ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற இளம் சாதனையாளர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் பெயர் புதியதோர் உலகம் செய்வோம். ஆனந்தம், இதயம் தொடர்களை இயக்கிய நித்தியானந்தம் படத்தை இயக்குகிறார். நடனபோட்டி, பாடல் போட்டி, அறிவுப்போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஜித், அனு, யாழினி, பிரவீன், அல்போன்ஸ்ராஜ், நாராயணன், சந்தோஷ் பாலாஜி. சந்தியா நடிக்கிறார்கள். இவர்களுடன் இமான் அண்ணாச்சியும் நடிக்கிறார். மலேசியாவை சேர்ந்த பிரவீன் இசை அமைக்கிறார்.
"பொதுவாக சிறுவர்களை மையப்படுத்திய படம் என்றால் அவர்கள் காதலுக்கு உதவுகிறவர்களாவோ. அல்லது வன்முறை பாதைக்கு திரும்புகிறவர்களாவோதான் சினிமா காட்டும். முதன் முதலாக சிறுவர்களை சமூக அக்கறை கொண்டவர்களாக சித்தரிக்கும் படம் இது. தவறான பாதையில் செல்லும் பெற்றோர்களை எப்படி திருத்துகிறார்கள் என்கிற கதை" என்கிறார் இயக்குனர் நித்யானந்தம்.