ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரேணிகுண்டா படத்தில் விலைமாது வேடத்தில் நடித்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சஞ்சனா சிங். அதன் பிறகு நல்ல வேடங்களில் நடிக்கும் அசையில் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் வரவில்லை. எனவே சில படங்களில் அயிட்டம் டான்ஸராக ஆட்டம் போட்டார். கவர்ச்சி நடனம் ஆடியதால் தற்போது கவர்ச்சி நடிகை என்ற முத்திரையோடு வலம் வருகிறார். மும்பையைச் சேர்ந்த சஞ்சனா சிங்குக்கு தமிழ்ப்படங்களில் நடிக்க ஆசை. அதற்காகவே சென்னையில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து குடியிருக்கிறார். அவரது போறாத நேரம் தமிழில் சொல்லிக்கொள்வதுபோல் அவருக்கு படங்கள் இல்லை. எனவே முழுமூச்சாக சான்ஸ் வேட்டையில் இறங்கி இருக்கிறார் சஞ்சனா சிங். பெரிய ஆள் சின்ன ஆள் என்ற பாகுபாடு பார்க்காமல் சிக்கென கவர்ச்சி உடையணிந்து கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி வருகிறார். அதோடு, சினிமா விழாக்களுக்கு யார் அழைத்தாலும் மறுபேச்சு பேசாமல் ஆஜராகிறார்.
யெஸ்..கவர்ச்சி உடையில்தான். நடிகைகளின் கணக்கே கணக்குதான்.