பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
விஜய் வசந்த், மகிமா, சரண்யா நடித்த படம் என்னமோ நடக்குது. பி.ராஜபாண்டி இயக்கி இருந்தார். விஜய் வசந்தின் தம்பி வினோத்குமார் தயாரித்திருந்தார். இந்த டீம் அப்படியே அடுத்த படத்தை உருவாக்குகிறது. படத்தின் பெயர் சிகண்டி. ஹீரோயின் மட்டும் இதில் ரிபீட் ஆகவில்லை. மற்றபடி டெக்னிக்கல் டீம் தொடர்கிறது.
விஜய் வசந்துடன் இன்னொரு முன்னணி நடிகர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஹீரோயினும் முன்னணியில் இருப்பவர்தான், அனேகமாக அட்டக்கத்தி நந்திதா, அல்லது ஸ்ரீதிவ்யாவாக இருக்கலாம். "இது ஒரு பக்கா ஆக்ஷன் படம். சமூக நோக்கம் கொண்ட கதை. நாம் தெரிந்தே அனுமதித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக குற்றத்தை மக்கள் முன்னால் வைக்கும் படம்" என்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.