ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லட்சுமிமேனனும், விஷாலும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்த பிறகு எல்லா ஹீரோக்களும் தங்கள் படத்தில் ஒரு லிப் லாக் முத்தக்காட்சி வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அவர் கூறியிருப்பதாவது: எனக்கு எல்லா தரப்பும் ஆடியன்சும் கிடைச்சிருக்குறது சந்தோஷமா இருக்கு. இளம் பெண்கள் என்னை ஒரு அண்ணனா பார்க்குறாங்க. இளைஞர்கள் தங்களில் ஒருத்தரா பார்க்குறாங்க. தாய்மார்கள் மகனா பார்க்குறாங்க. குழந்தைங்களுக்கு என்னை எப்படி புடிக்குதுன்னே புரியல. எப்படியோ எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்கிறேன். அதனால் எல்லோருக்கும் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன். அவுங்க மனசை புரிஞ்சிக்கிட்டேன். மான் கராத்தே படத்துல வில்லன் கால்ல விழுந்து அழும் சீன்ல ஏன் நடிச்சீங்கன்ன உரிமையோட கேட்குறாங்க. இனி அப்படி நடக்காம பார்த்துப்பேன். லிப் லாக் முத்தக்காட்சிகள்ல நடிக்கவே மாட்டேன், என் படங்கள் குடும்பத்தோடு பார்க்கிறமாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்கிறார் சிவகார்த்திகேயன்.