Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கத்தி படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி மறுப்பு!

25 ஜூன், 2014 - 14:07 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்று வந்தது. இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் மூன்றாவது நாள் திடீரென படப்பிடிப்பு நடத்த கொடுத்த அனுமதியை சென்னை விமானநிலைய அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். அதனால், அதிர்ச்சி அடைந்த கத்தி படக்குழுவினர் வேறு வழியின்றி உடனடியாய் ஐதராபாத் விமானநிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று அங்கு படப்பிடிப்பை மாற்றியுள்ளனர்.


தீவிரவாதிகள் அப்பாவி மக்களை பணயக்கைதிகயாக பிடித்து வைத்துக்கொள்வதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் கத்தி. எனவே சென்னை விமான நிலையத்தில் பெரும்பாலான காட்கிளை எடுக்க வேண்டிய நிலை. அதோடு, கத்தி படத்தின் பாடல் காட்சி ஒன்றையும் அங்கேயே படமாக்க இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விரும்பினார். ஏற்கனவே கடந்த மாதம் இதே விமான நிலையத்தில் சில காட்சிகளை படமாக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ்.


தற்போது, டூயட் பாடல் காட்சி ஒன்றையும் விமான நிலையத்தில் படமாக்க தினசரி பல லட்சம் கட்டணம் செலுத்தி படப்பிடிப்பை நடத்தி வந்தார். முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு பிரச்சனை இல்லாமல் முடிந்தது. ஆனால் மூன்றாவது நாள் திடீரென படப்பிடிப்புக்காக கொடுத்த அனுமதியை ரத்து செய்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டனர். அனுமதி மறுத்ததன் காரணத்தை அதிகாரிகள் கூறவில்லையாம். இதனால் பெரும் ஏமாற்றமும் மன உளைச்சலும் அடைந்தாராம் ஏ.ஆர். முருகதாஸ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in