Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் 'த்ரிஷ்யம்' அடுத்த மாதம் ஆரம்பம்...!

25 ஜூன், 2014 - 12:16 IST
எழுத்தின் அளவு:

மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய அமோகமாக விற்கப்பட்டு, கன்னடத்தில் தயாராகி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது. தெலுங்கில் விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதால் படப்பிடிப்பு ஆரம்பமாக தாமதமாகிவிட்டது. கமல்ஹாசன், தற்போது “விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்' படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அந்தப் படங்களின் பணி முடிந்த பிறகு ஆரம்பிக்கலாம் என்று இருந்தனர்.


இப்போதுத அந்த இரண்டு படங்களின் வேலைகள் முடிவடையும் நிலையில் வந்துவிட்டதால் தமிழில் 'த்ரிஷ்யம்' படத்தைத் தயாரிக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டனர். தெலுங்கு ரீமேக்கை நடிகை ஸ்ரீப்ரியா இயக்க, கன்னட ரீமேக்கை பி.வாசு இயக்க, தமிழ் ரீமேக்கை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார். கமல்ஹாசன் அவர் இயக்கியனால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜீத்து இந்த படத்தை இயக்குகிறார்.


கமலுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் முடிவு செய்யப்பட உள்ளதாம். முதலில் கௌதமி நடிக்கப் போகிறார் என்றே செய்திகள் வெளிவந்தன. ஆனால், அது இன்னும் உறுதியாகவில்லை. ஒரு குடும்பப் பாங்கான கதையாகவும், அதே சமயம் பரபரப்பான த்ரில்லராகவும் இருப்பதால் இந்தப் படம் மலையாளத்தில் பெற்ற வெற்றியை மற்ற மொழிகளிலும் பெறும் என்று எதிர்பார்க்கின்றனர். அதை கன்னட ரீமேக்கின் வெற்றியும் உறுதி செய்துவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் அவருடைய வயதுக்குரிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in