வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட தங்கை பர்பி ஹண்டா. இவர் முறைப்படி பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, பெல்லி நடனங்களை கற்றவர். பல்வேறு நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார். இதுவரை 13 விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அதில் மூன்று விளம்பரங்களில் பிரியங்கா சோப்ராவுடன் நடித்துள்ளார்.
பர்பி ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. தற்போது இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதற்கு முன் தமிழ் படம் ஒன்றில் ஒரு பாட்டுக்கு ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விமல், அமிர்தா, சமுத்திரகனி நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட இருக்கிறார். பிரியங்கா, மீரா, பிரணிதியை தொடர்ந்து சோப்ரா பேமிலியில் இருந்து பர்பியும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.