தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காமெடியன்களும் படம் தயாரிக்கிற காலம் இது. அந்த வரிசையில் சூரியும் விரைவில் படம் தயாரிக்க இருக்கிறார். இன்றைக்கு டாப் காமெடியன்களில் சூரியும் ஒருவர். ஒரு நாளைக்கு 5 லட்சம் முதல் பத்து லட்சம் வரை கம்பெனிக்கு ஏற்ற மாதரி சம்பளம் வாங்குகிறார். சாலிகிராமத்தில் மினி தியேட்டருடன் கூடிய அலுவலகம் வைத்திருக்கிறார். இதனால் சூரி படம் தயாரிப்பது ஆச்சர்யம் இல்லை.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த காலத்தில் கலாப காதலன் என்ற படத்தில் வாய்ப்பு கேட்டு அந்த ஆபீசுக்கு போயிருந்தேன். அவ்வளவு பிரமாண்ட ஆபீசு அது. அந்தப் படத்துல வாய்ப்பு கிடைக்கல. ஆனா அந்த அலுவலத்தை என் சொந்த அலுவலகமாக வாங்க வைத்துவிட்டது சினிமா. அந்த சினிமாவுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா? கண்டிப்பா செய்வேன். என்னோட ஆபீசுல மினி தியேட்டர் இருக்கு. டிஷ்கசன் ரூம் இருக்கு. நல்ல படம் எடுக்க வர்றவங்க அதை பயன்படுத்திக்க திறந்தே வச்சிருக்கேன். நான் நல்ல படம் எடுக்கப்போறேன்னு யாராவது வந்தால் ஆபீஸ் சாவிய அவுங்க கையில கொடுத்திருவேன். காலம் கனிந்து வரும்போது நாங்களும் சினிமா எடுப்போமுல்ல. என்கிறார் சூரி.