தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம். அவர் தனது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் 2006ம் ஆண்டு திருட்டுபயலே படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். சந்தோஷ் சுப்பிரமணியம், மதராச பட்டினம், அவன் இவன், மாற்றான், தெனாலிராமன் உள்பட 13 படங்களை தயாரித்துள்ளார். வை ராஜா வை, இரும்பு குதிரை, அனேகன், தனி ஒருவன் படங்களை தயாரித்து வருகிறார்.
கல்பாத்தி குரூப் நிறுவனங்களின் தலைவராக இருக்கும் எஸ்.அகோரம் சினிமாவை போன்றே கிரிக்கெட் விளையாட்டிலும் தனது பங்களிப்பைச் செய்து வருகிறார். அதனால் அவர் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ்நாடு கிரிக்கெட் கழகத்தின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 84வது பொதுக்குழுவிலும் அவர் துணை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.