Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராம நாராயணன் உடல் தகனம் - திரையுலகினர் அஞ்சலி!!

24 ஜூன், 2014 - 14:19 IST
எழுத்தின் அளவு:

மறைந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம நாராயணனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு ஏராளமான தமிழ் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். உலகளவில் அதிக படங்களை இயக்கி சாதனை படைத்த இயக்குநர் என்ற பெருமை பெற்றவர் ராம நாரயணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில் இதுவரை 126 படங்கள் இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் ஆர்யா சூர்யா என்ற படத்தை இயக்கினார். சீறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்த ராம நாராயணன், சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி ஜூன் 22ம் தேதி காலமானார்.


இதனையடுத்து அவரது உடல் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை கொண்டு வரப்பட்டு, பின்னர் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. திமுக., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், திரையுலகினர் கமல், விஜயகாந்த், சரத்குமார், இளையராஜா, கவுண்டமணி, சங்கர் கணேஷ், ஏ.வி.எம்.சரவணன், பேரரசு, ஆர்.கே., கே.முரளிதரன், பவர்ஸ்டார் சீனிவாசன், அருள்நிதி, சிவக்குமார், பிரமிட் நடராஜன், ராதாரவி, ராதிகா, உதயநிதி ஸ்டாலின், அர்ஜூன், அபிராமி ராமநாதன், செந்தில், ரமேஷ் கிருஷ்ணா, கேயார், குஷ்பூ, சுந்தர்.சி, பாரதிராஜா, பாண்டியராஜன், போஸ் வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், மயில்சாமி, பெப்சி விஜயன், அமீர், எடிட்டர் மோகன், நாசர், கே.ராஜன், கோவை சரளா, எஸ்.பி.முத்துராமன், டி.ராஜேந்தர், சசிகுமார், ஆர்.பி.சவுத்ரி, ஆர்.சுந்தர்ராஜன், கானா உலகநாதன், ராமராஜன், கஞ்சா கருப்பு, சித்ரா லட்சுமணன், உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.


உடல் தகனம்


பின்னர் அவரது உடல் சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கண்ணமாபேட்டை ஈடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ராம நாராயணனின் மகன் முரளி ராமசாமி இறுதி சடங்குகளை செய்தார்.


படப்பிடிப்புகள் ரத்து


ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in