பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்தவர் நந்தகி. அந்த படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதோடு அதன்பிறகு கோலிவுட்டில் அவரும பேசப்படும நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அதையடுத்து எந்த படத்திலும் நடிக்காத அவர், சில ஆண்டுகளாக காணாமல் போனார். ஆனால், தற்போது திரைக்கு வந்துள்ள நேற்று இன்று என்ற படத்தில் விமலுக்கு ஜோடியாக ஒரு வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். இதையடுத்து, சில டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ள அவர், விரைவில் எனது அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளிவரும்,, அப்படி நான் நடிக்கும் படம் எனது முழு நடிப்புத்திறமையையும் வெளிக்கொண்டு வரக்கூடியதாக இருக்கும் என்கிறார்.
மேலும், நந்தகி என்ற பெயரில் நான் ரீச்சானபோதும், அந்த பெயர் வைத்த பிறகு எனக்கு புதிய படங்களே இல்லை. அதனால், இப்போது மனோசித்ரா என்று எனது பெயரை மாற்றியிருக்கிறேன். அதனால் யாரும் தயவு செய்து என்னை நந்தகி என்று இனிமேல் கூப்பிடாதீர்கள் என்று கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறார் அவர். மேலும், மனோசித்ரா என்று பெயரை மாற்றிய பிறகு எனக்கு திரையுலகில் சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால், அடுத்த ஆண்டு கண்டிப்பாக எனது ஆண்டாக இருக்கும் என்கிறார் மனோசித்ரா.