விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் |
நடிகர் ஷாம் - கஷீஸ் தம்பதியருக்கு பெங்களூருவில் 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. 12பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஷாம். தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, இயற்கை, உள்ளம் கேட்குமே உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கிக் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தில்லாலங்கடி படத்தின் ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார். ஷாமின் மனைவி கஷீஸ் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று பெங்களூருவில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஷாம் - கஷீஸ் தம்பதியருக்கு ஏற்கனவே ஸமைரா என்ற பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரசவத்துக்கு பின்னர் தாயும், சேயும் நலமாக இருப்பதாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.