Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கவனமாக இருங்கள்…தமன்னாவுக்கு தெலுங்கு இயக்குனர்கள் அட்வைஸ்…!

23 ஜூன், 2014 - 15:56 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கில் நடித்தால் தென்னிந்தியாவில் பிரபலம் ஆகலாம், இந்தியில் நடித்தால் இந்தியா முழுதும் பிரபலம் ஆகலாம் என நினைத்த தமன்னாவின் ஆசைக்கு 'ஹம்சகல்ஸ்' படமும் அடியாக அடைந்துவிட்டது. தமன்னா நடித்த இரண்டு இந்திப் படங்களுமே அவருடைய இந்தித் திரையுலக வாழ்க்கையில் இடியைத்தான் இறக்கியது. இருந்தாலும் அடுத்தடுத்து நடிக்கும் இந்திப் படங்களாவது தமன்னாவுக்கு வெற்றியைத் தேடித் தருமா என பாலிவுட் வட்டாரங்கள் அவருடைய ராசியைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டனவாம்.


இதனிடையே தமன்னா மீது உண்மையான பாசம் கொண்ட சில இயக்குனர்கள் தமன்னா இந்திப் படங்களில் நடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் தேஜா, “ஹம்சகல்ஸ்' படத்தைப் பொறுத்தவரையில் படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே இது கண்டிப்பாக 'பிளாப்' படம் என்பதைச் சொல்லி விடலாம். நிறைய படங்களில் ஒரு படத்தைப் பற்றி கருத்து சொல்லும் போது, இடைவேளை வரையாவது காத்திருக்க வேண்டும். ஆனால், 'ஹம்சகல்ஸ்' படத்திற்கு அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் எழவில்லை,” என்று சொல்கிறார்.


பிரபல இயக்குனரான புரி ஜெகன்னாத், “நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், தமன்னாவின் திறமை என்னவென்பது தெரியும். அவர் மிகச் சிறந்த நடிகை, தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அவருடைய நடிப்பை அனைவரும் ரசிப்பார்கள். சினிமாவில் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது என்றாலும், என்ன மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறோம் என்பதை தமன்னா கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அவருடன் பணிபுரிய எனக்கு எப்போதும் ஆசைதான், அநேகமாக எனது அடுத்த படத்தில் அவர்தான் நாயகியாகவும் இருக்கலாம்,” என்றும் தெரிவித்துள்ளார்.


இதனிடையே சமூக வலைத்தளங்களில் 'ஹம்சகல்ஸ்' படத்தைப் பற்றி ரசிகர்கள் மிகவும் கேலவமாக திட்டி வருகிறார்கள். சஜித் கான், தமன்னாவின் கேரியரை மோசமாக்கி விட்டார் என்று அவரை வெகுவாக திட்டி வருகிறார்கள். தமன்னா இனி சஜித் கான் இயக்கத்தில் நடிக்கவே கூடாது என்றும் சொல்லி வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in