பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆரண்ய காண்டம், சென்னை 28 படங்களை தயாரித்த எஸ்.பி.பி.சரண், தனது நண்பர் ஜே.செல்வகுமாருடன் இணைந்து தயாரிக்கும் படம் திருடன் போலீஸ். அட்டக்கத்தி தினேஷ், ஐஸ்வர்யாவுடன் பால சரவணன், நிதின் சத்யா, ஜான் விஜய், ராஜேஷ் நடிக்கிறார்கள். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நிபுணர் கார்த்திக் இயக்குகிறார். யுவன் இசை அமைக்கிறார்.
பால்ய பருவத்தில் விளையாடிய முக்கியமான விளையாட்டு திருடன் போலீஸ் விளையாட்டுதான். அப்படி விளையாடிய நண்பர்கள் தினேசும், பால சரவணனும் பிற்காலத்தில் நிஜமாகவே தினேஷ் திருடனாகவும், பால சரவணன் போலீசாகவும் மாறுகிறார்கள். முன்பு விளையாட்டாய் செய்ததை இப்போது சீரியசாக செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆட்டம் எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்பதுதான் கதை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜேஷ் முக்கிய கேரக்டடரில் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் ஒரு சில காட்சிகளை படமாக்கப்பட வேண்டியது உள்ளது. அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.