விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
நடிகை அமலாபாலின் கணவரும், இயக்குனருமான விஜய், இயக்கி உள்ள படம் சைவம். இது பிராணிகளை வதைக்க கூடாது. அசைவம் சாப்பிடக்கூடாது என்கிற கருத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. இதனை இயக்குனர் விஜய், ஐதராபாத்தில் நடிகை அமலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போட்டுக் காட்டினார். காரணம் அமலா, விலங்குகளை பாதுகாக்கும் புளூ கிராஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தன் கணவர் நாகார்ஜுனாவுடன் இணைந்து படத்தை பார்த்தார் அமலா.
படத்தை பார்த்த அமலா "இந்தப் படம் பிற உயிர்கள், குறிப்பாக பிராணிகள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதை என்பதை வலியுறுத்துகிறது. நமது கலாச்சார வேர்களை மறந்து விடக்கூடாது என்ற மைய கருத்தையும் கொண்டுள்ளது. சைவம் நிச்சயம் வரிவிலக்கிற்கு தகுந்த படம். பிராணிகள் மீது அன்பு, நம் கலாச்சாரம் பற்றி எதிர்கால சந்ததியினருக்கு இந்தப் படம் எடுத்துச் செல்லும். எல்லா மொழிகளிலும் வெளியிட தகுதியான படம்" என்றார்.