தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹாலிவுட், பாலிவுட் என்று ஒரு பெரும் கலக்கு கலக்கி விட்டு, தற்போது தென்னிந்திய சினிமாவுக்குள் கால் பதித்திருக்கிறார் சன்னி லியோன். தமிழில், ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடல் காட்சியில் குத்தாட்டம் போட்ட சன்னி அடுத்தபடியாக, மனோஜ் மஞ்சு நாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் ஆபாச டீச்சர் வேடத்தில் நடிக்கிறாராம். மேலும் படத்தில் ஒரு குத்துபாட்டுக்கும் ஆட உள்ளாராம்.
இந்த விசயம் ஆந்திராவில் வெளியானதை அடுத்து, இந்த படத்துக்கு இப்போதே எதிர்ப்பு கிளம்பி விட்டதாம். குறிப்பாக ஆசிரியைகளை அசிங்கப்படுத்துவது போல் சன்னியின் கதாபாத்திரம இருப்பதாக சொல்லி ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களாம். இருப்பினும், படப்பிடிப்பை முடுக்கி விட்டிருக்கிறார்களாம்.
இதனால், ஏற்கனவே பலதரப்பட்ட சர்ச்சைகளை சந்தித்த சன்னிலியோன், முதன்முறையாக தென்னிந்தியாவிலும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.