ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் காமராஜ். 2004ல் வெளியான இப்படம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் திரைக்கு வருகிறது. காமராஜரின் 112வது பிறந்த நாளான 11.7.2014 அன்று இப்படம் இந்தியா முழுவதிலும் வெளியாகிறது.
முன்னதாக, முந்தைய காமராஜ் படத்தில் சொல்லப்படாத மேலும் சில முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களையும இந்த முறை அப்படத்தில் இணைத்து வெளியிடுகிறார்களாம். ஏற்கனவே காமராஜர் வேடத்தில் பிரதீப் மதுரம் மற்றும் சாருஹாசன், வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ள அப்படத்தில் இப்போது சுதந்திர போராட்ட தியாகி ஒருவரின் மகன் கேரக்டரையும் இணைக்கிறார்கள்.
அந்த வேடத்துக்கு இப்போதைய நடிகர்கள் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று பரிசீலனை செய்தபோது டைரக்டர் சமுத்திரகனி கச்சிதமாக இருப்பார் என்று முடிவெடுத்து அவரிடம் அதுபற்றி பேசினார்களாம். ஏற்கனவே காமராஜ் படத்தின் மீது ஈர்க்கப்பட்டிருந்த அவர், தான் நடிப்பதற்கு உடனே சம்மதம் சொல்லி விட்டாராம். அந்த வகையில், சமுத்திரகனியின் கேரக்டர் அப்படத்தில் அரை மணி நேரம் இணைக்கப்படுகிறதாம். இதற்கான படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.