Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எது ஒரிஜினல் விடுதலைப்புலி பிரபாகரன் படம்?

23 ஜூன், 2014 - 11:55 IST
எழுத்தின் அளவு:

விடுதலைப்புலி பிரபாகரனை வைத்து அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சினிமாக்காரர்களும் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அவரைப் பற்றி திரைப்படம் எடுப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் பிரபாகரனை வைத்து படம் எடுத்தால், உலகம் முழுக்க பரவிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் அந்தப் படத்தை பெருமளவில் பார்ப்பார்கள். அதன் மூலம் எப்.எம்.எஸ். ஏரியாவில் செமத்தியாய் பணம் பார்க்க முடியும் என்ற கணக்குதான்.


சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் பிரபாகரனைப் போன்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரபாகரனின் கதையை மையமாக வைத்து தற்போது இரண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வேந்தர் மூவீஸ் மதன் தயாரிப்பில், பிரவீண்காந்தி இயக்கும் புலி பார்வை என்ற படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் எஸ்.மதனே பிரபாகரன் வேடத்தில் நடிக்கிறார்.


பிரபாகரனை கதாநாயகனாக சித்தரித்து எடுக்கப்பட உள்ள மற்றொரு படத்தை வ. கௌதமன் இயக்குகிறார். தமிழ் தேசியவாதியான இவர் ஈழ ஆதரவாளர். எனவே பிரபாகரனைப் பற்றி இயக்க உள்ள படத்துக்காக பல வருடங்கள் ஹோம்வொர்க் செய்து உண்மைத்தன்மை குறையாமல் ஸ்கிரிப்ட்டை உருவாக்கி உள்ளாராம்.


பிரவீண்காந்தியோ மசாலாப்பட இயக்குநர். இவர் பிரபாகரனை எப்படி சித்தரிப்பார்? அவர் படத்தினால் நம் படத்துக்கு பாதிப்பு வருமா என்ற கவலையில் வ.கௌதமன் இருக்கிறார். கௌதமன் படம் திரைக்கு வருவதற்குள் தன் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கிறார் பிரவீண்காந்தி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in