'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் தெலுங்கில் இந்துருடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் வெளியானது. தெலுங்கானா மற்றும் சீமாந்திராவில் 350 தியேட்டர்களில் வெளியாகி இருக்கும் இந்துருடு படத்துக்கு பாசிட்டிவ்வான ரிப்போர்ட் கிடைத்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக ஹரி இயக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் விஷால். இந்துருடு படம் வெளிவருவதையொட்டி அப்படத்தின் புரமோஷனுக்கு சில நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானித்தார் விஷால்.
இயக்குநர் ஹரியோ ஏற்கனவே பக்காவாக திட்டமிட்டு பூஜை படத்தின் படப்பிடிப்புக்கான பிரேக்டவுன் போட்டு வைத்திருந்தார். திடீரென வந்து, இந்துருடு படத்தின் புரமோஷனுக்காக ஆந்திரா செல்ல வேண்டும் என்று விஷால் சொன்னதும் சற்றே அதிர்ச்சியடைந்திருக்கிறார் ஹரி. அதனால் மொத்த ஷெட்யூலும் தடைபடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறகு வேறு வழியே இல்லை என்றதும் விஷால் இல்லாத காட்சிகளை எடுத்துக்கொள்வதாக சொல்லி விஷாலை ஆந்திராவுக்கு செல்ல சம்மதித்திருக்கிறார் ஹரி. அதன் பிறகு ஹைதராபாத் சென்ற விஷால், இந்துருடு திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு விசிட் அடித்து வருகிறார்.
இந்துருடு வசூல் பண்ணினால் அடுத்து நடிக்கிற பூஜை படத்தை மேலும் சில கோடிகள் அதிகமாக விற்கலாம் அல்லவா?