புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பருத்தி வீரன் படத்தில் அறிமுகமான கார்த்தி அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி என பல படங்களில் நடித்தார். ஆனால், ஆரம்பத்தில் சில படங்கள் ஹிட்டடித்தபோதும், அதன்பிறகு தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார். கடைசியாக நடித்த பிரியாணி படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த அவரை அந்த படமும் காலை வாரி விட்டதால், இப்போது கதை விசயத்தில் மாற்றம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.
அதாவது, காதல், ஆக்சன், காமெடி என்ற கோணத்தில் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த கார்த்தி, காமெடியன் சந்தானத்தையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து அப்படி செய்ததால் அது ரசிகர்களுக்கு போர் அடித்து விட்டது போன்று, இப்போது கார்த்திக்கும் போரடித்து விட்டதாம்.
அதனால், இனிமேல் காமெடியை ஓரங்கட்டி விட்டு சீரியஸ் கதைகளை தேர்வு செய்து நடிக்கப்போகிறாராம். அதன்காரணமாக, அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிக்கும் மெட்ராஸ் படத்தில் முதன்முறையாக சீரியசான ரோலில் நடிக்கிறாராம் கார்த்தி. இந்த படத்தில் காளி என்ற கேரக்டரில் நடிக்கும் கார்த்தி, படம் முழுக்க ஆப் பேண்ட், பனியன் என்ற எளிமையான காஸ்டியூம் அணிந்தே நடிக்கிறாராம். அதோடு தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் சீரியசான செண்டிமென்ட் காட்சிகளும இந்த படத்தில் நிறைய உள்ளதாம்.