விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் - அரிமாநம்பி. இந்தப் படம் அண்மையில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. அரிமா நம்பி படத்தைப் பார்த்த தணிக்கைகுழுவினர் அதிரிச்சியில் உறைந்து போய்விட்டனராம்.
காரணம்...படத்தின் கதாநாயகன் மட்டுமின்றி கதாநாயகியும் குடிப்பதுபோல் பல காட்சிகள் இருந்ததாம். அதோடு வைரமுத்து எழுதிய ஒரு பாடல் காட்சி முகம் சுழிக்கும்படி படமாக்கப்பட்டிருந்ததாம். அரிமா நம்பி படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் அனைவரும் ஒரு மனதாக எடுத்த முடிவின்படி கதாநாயகன், கதாநாயகியும் குடிப்பதுபோல் உள்ள பல காட்சிகளுக்கு கட் கொடுத்திருக்கின்றனர். அதோடு, ஆபாசத்தொழுக்காக இருந்த ஒரு பாடல் காட்சியை முழுசாக நீக்கும்படி சொல்லிவிட்டனர்.
தணிக்கைக்குழுவின் முடிவுக்கு கட்டுப்பட மறுத்த கலைப்புலி தாணு எந்த காட்சியையும் கட் பண்ண ஒப்புக்கொள்ள மாட்டேன், அதே சமயம் படத்து யு சான்றிதழ் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு தணிக்கை அதிகாரி ஒப்புக்கொள்ளவில்லை. எனவே ஆர்சி என்று சொல்லப்படும் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்றனர். அங்கே ஆட்சேபத்துக்குரிய பாடல் காட்சி உட்பட ஒரு கட் கூட இல்லாமல் அரிமா நம்பி படத்துக்கு யு சான்றிதழ் வாங்கிவிட்டார் தாணு.