பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த பொங்கலுக்கு ஜில்லாவை கொடுத்த விஜய், வருகிற தீபாவளிக்கு கத்தியோடு வருகிறார். அதனால் கத்தியை தீட்டும் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதோடு, துப்பாக்கி இந்தி ரீமேக்கான ஹாலிடே இந்தி படமும் 100 கோடி வசூலை தாண்டி ஓடிக்கொண்டிருப்பதால், இதே சூட்டோடு கத்தி படத்தையும் இன்னொரு ஹாட்ரிக் ஹிட்டாக கொடுத்து விட வேண்டும் என்பதில் தீவிரமடைந்திருக்கிறார் முருகதாஸ்.
இந்த நிலையில் தனது பிறந்த நாளின்போது கத்தி பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகும் என்று ஏற்கனவே தனது ரசிகர்களுக்கு அறிவித்திருந்த விஜய், இன்று தனது பிறந்த நாள் என்பதால், நேற்று இரவு கத்தியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, நேற்று மதியத்தில் இருந்தே கத்தி படத்தில் விஜய்-சமந்தா இடம்பெற்ற புகைப்படங்களுடன் கூடிய போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்ட விஜய் ரசிகர்கள் அதற்கு லைக் கொடுக்கவும் தொடங்கி விட்டார்கள்.
அதோடு, முறைப்படி ஏ.ஆர்.முருகதாஸ் பர்ஸட் லுக் போஸ்டரை வெளியிடுவதற்கு முன்பே, விஜய்யின் பேஸ்புக்கில் இருந்து கத்தி போஸ்டர் ஒன்றையும் அவரது ரசிகர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டு லைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.
அந்த வகையில், கத்தியில் விஜய்-சமந்தா ரொமான்ஸ் செய்யும் போட்டோவுக்கு மட்டும் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரம் ரசிகர்கள் லைக் கொடுத்துள்ளனர். தமிழகத்தின் பல ஊர்களில் விஜய் ரசிகர் மனறங்களிலும் கேக் வெட்டி விஜய்யின் பிறந்த நாளை, கத்தி டீசரோடு கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.