மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சில வருடங்களுக்கு முன்பு வரை புதிதாக நடிக்க வந்த அனைவருமே தங்களை கமல் ரசிகர், ரஜினி ரசிகர் என்று கூறிக்கொள்வார்கள். இப்போது சினிமா உலகுக்கு வரும் புதுமுக நடிகர்களோ தங்களை அஜித் ரசிகர்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் உள்ள நடிகர்களில் ஜெய்யும் ஒருவர். விஜய் நடித்த பகவதி, யூத் படங்களில் சிறு வேடத்தில் தலைகாட்டியபோது தன்னை விஜய் ரசிகராகக் காட்டிக் கொண்டார் ஜெய்.
சுப்பிரமணியபுரம் படத்தில நடித்து கதாநாயகனாக வளர்ந்த பிறகு தன்னை அஜித் ரசிகராக அறிவித்துக்கொண்டார். அஜித் ரசிகர் என்று சும்மா சொல்லிக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் பல விஷயங்களில் அஜித் வழியிலேயே நடைபோடுகிறார் ஜெய். படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது, படத்தின் புரமோஷன் இசைவெளியீட்டு விழா எதற்கும் வர மாட்டேன் என்று அஜித் சொல்வதுபோலவே ஜெய்யும் சொல்லி வருகிறார்.
அடுத்ததாக, அஜித்தைப் போலவே கார் ரேஸ்களிலும் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னைக்கு அருகில் உள்ள இருங்காட்டுக்கோட்டை என்ற இடத்துக் சென்று கார் ரேஸில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபடுகிறார். விரைவில் தேசிய அளவில் நடைபெறும் கார் ரேஸிலும் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெய்.